கிருஷ்ண லீலை
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
கிருஷ்ண பகவானின் குணத்தை பற்றி ஆண்டாள் திருப்பாவையில் கூறுகிறாள். அவரை 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என போற்றுகிறாள். இதற்கு பொருள் 'வெறுப்பவர் மனதையும் வெல்பவன்'. தனக்கு எதுவுமே தராத கோபியரின் வீட்டிற்குள் புகுந்து வெண்ணெய் திருடினான். எதற்காக தெரியுமா...தன்னை வெறுப்பவர்களிடமும் அன்பாக இருப்பவர் கிருஷ்ணர். அவர்களையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லவே இத்தகைய லீலைகளை நிகழ்த்தினார்.