கதவு திறந்தது
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
பெங்களூரு - மைசூரு சாலையில் 50 கி.மீ., துாரத்திலுள்ள தலம் சென்னப்பட்டினம் அருகிலுள்ள தொட்டமளூர். இங்குள்ள அப்ரமேயர் (பெருமாள்) கோயிலில் உள்ள நவநீதகிருஷ்ணர் சன்னதி புகழ் மிக்கது. தவழும் குழந்தை வடிவத்தில் சுவாமியை தரிசிக்கலாம். வேதங்களை அளித்த வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஒருமுறை பக்தரான புரந்தரதாசர் இங்கு வரும் போது நேரமாகி விட்டதால் கோயில் பூட்டியிருந்தது. ஆனால் தரிசிக்கும் ஆவலில் அவர் ''ஜகத்தோத்தாரணா'' என்னும் பாடல் பாட கதவு தானாக திறந்தது. குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு மரத்தொட்டில் கட்டுகின்றனர்.