உள்ளூர் செய்திகள்

தேய்பிறையில் முழுநிலா

கிருஷ்ணர் பிறந்த போது தேய்பிறை அஷ்டமி ஆயிற்றே! வானில் எப்படி முழுநிலா தோன்றியது? கிருஷ்ணர் அவதரித்த போது கிரகங்கள் எல்லாம் சுபமான இடத்தில் இருந்தன. தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும், பகவான் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் வானில் பவுர்ணமி பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தியபடி காட்சியளித்தார். கரிய மேகம் போன்ற அவர் மஞ்சள் நிறப் பட்டாடை, நவரத்தின ஆபரணங்கள் சூடியிருந்தார். அவரது தாயான தேவகியும் தெய்வப் பெண்ணாக ஜொலித்தாள்.