உள்ளூர் செய்திகள்

பொன் தானம்

கடவுள் படைப்பில் எதுவும் தாழ்ந்தது அல்ல. எளிய பூக்கள் கூட சிறப்பானது தான். பெருமாளுக்கு தும்பைப்பூ மாலை அணிவித்தால் ஏழைப் பெண்ணுக்கு பொன் தானம் கொடுத்த புண்ணியம் சேரும். சிவலிங்கத்திற்கு ஒரு ஊமத்தம்பூ சாத்தினால் லட்சம் பசுக்களை தானம் அளித்த புண்ணியம் கிடைக்கும். ஊமத்தம்பூவை 'உன்மத்தம்' என்பர். இதை விரும்பி ஏற்பதால் சிவனுக்கு 'உன்மத்த சேகரன்' என பெயருண்டு.