குழந்தை வரம் தருபவர்
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
குழந்தை இல்லையே என வருந்துவோரின் குறை தீர்க்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அம்மகளத்துார் செல்வ விநாயகர். பல ஆண்டுக்கு முன் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விநாயகரின் அருளால் குழந்தை பிறக்க இக்கோயில் உருவானது. கையில் பாசம், அங்குசம் வைத்திருக்கும் விநாயகரின் பாதத்தில் எலி வாகனம் உள்ளது. கடன் சுமை தீர சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெய்யில் விளக்கு ஏற்றுகின்றனர். சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாத்தினால் விருப்பம் நிறைவேறும். எப்படி செல்வது: கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து 21 கி.மீ., நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94426 38260