திருப்பாவாடை
UPDATED : செப் 27, 2024 | ADDED : செப் 27, 2024
ஏழுமலையானுக்கு நைவேத்யம் செய்யப்படும் உணவு வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். * திருப்போனகம் என்பது பச்சரிசியால் ஆன அன்னம். * திருப்போனகத்தில் நெய் விட்டு அவித்த பச்சைப்பயறு கலந்தால் அது பருப்பவியல் திருப்போனகம். * திருவோலக்கம் என்பது வறுத்த, பொரித்த உணவுகள் * அப்பம், அதிரசம், வடை, கூட்டு, 300 மரக்கால் அரிசி அன்னத்தை விசேஷமாக நைவேத்யம் செய்வது திருப்பாவாடை. ஒரு மரக்கால் என்பது 4படி இந்த நைவேத்யம் பற்றிய விளக்கம் அனைத்தும் திருமலை சாசனத்தில் உள்ளது.