நலமுடன் வாழ...
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலைதுதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயம் என்னவிதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையேஉதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், சிவந்த மாணிக்கத்தைப் போலவும், மாதுளம்பூவின் மொட்டு போலவும் இருப்பவள் அபிராமி. மலரில் அமர்ந்த திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள். கொடி மின்னலைப் போன்றும், மணம் மிக்க குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.