உள்ளூர் செய்திகள்

100 மூடை அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள சிவலிங்கம் (பிரகதீஸ்வரர்) உலகிலேயே பெரிய லிங்கமாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தைச் சுற்றி வரத் தேவையான இடம் கருவறையைச் சுற்றி உள்ளது. வாசல் வழியாகத் தெரியும் சிவலிங்கத்தின் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேகம் செய்வதற்கு வசதியாக இருபுறமும் படிகள் உள்ளன. ஐப்பசி பவுர்ணமியன்று 100 மூடை அரிசியை சமைத்து சோறாக்கி அபிஷேகம் செய்வதால் மலை போல சோறு சிவலிங்கத்திற்கு சுற்றிலும் நிரம்பும்.