உள்ளூர் செய்திகள்

பாண்டியனை மாற்றிய பாட்டு

பசுவின் சாணத்தை காய வைத்து நெருப்பில் இட கிடைக்கும் சாம்பல் திருநீறு. கிருமிநாசினியான இதை தினமும் நெற்றியில் பூச ஜலதோஷம், தலைவலி நீங்கும். சிவனின் சின்னமான திருநீறை கையில் வைத்து, ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாயநம' என்று சொல்லி நெற்றியில் பூச வேண்டும். திருநீறுக்கு விபூதி, ரட்சை என்றும் பெயருண்டு. இதன் சிறப்பை அவ்வையார் 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார். திருஞான சம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் தேவார பதிகத்தில் திருநீற்றின் பெருமையை பாடியுள்ளார். இந்த பாடலே மதுரையை ஆட்சி செய்த கூன்பாண்டியனை 'நின்றசீர் நெடுமாற நாயனார்' என்னும் சிவனடியாராக மாற்றியது.