உள்ளூர் செய்திகள்

உப்பு இல்லாமல்...

உப்பை பொறுத்து உணவின் ருசி அமையும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். சுவைக்கு ஆதாரமான உப்பைக் சற்று குறைத்துக் கொள்வது உடம்புக்கு நல்லது. வயதான காலத்தில் உப்பில்லாமல் சாப்பிட்டுக் கொள்ளலாம் என அலட்சியம் செய்யக் கூடாது. இதற்காகவே விரத நாட்களில் உப்பில்லாமல் சமைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நம் முன்னோர்கள் உருவாக்கினர். இதற்கு 'அலவண நியமம்' என்று பெயர். 'அலவணம்' என்றால் 'உப்பில்லாமல்' என்பது பொருள். மழை பெய்ய வேண்டி வருணஜபம் செய்பவர்கள் உப்பில்லாமல் சாப்பிட்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.