உள்ளூர் செய்திகள்

நம்பிக்கைக்கு நடராஜா

அந்த காலத்தில் மன்னரிடம் நீதி கேட்டு வருபவர்கள் ஆராய்ச்சி மணியை அடிப்பார்கள். அவர்களிடம் பிரச்னையை கேட்டு நீதி வழங்குவார் மன்னர். இதைப் போல ஆராய்ச்சி மணி ஒன்று நெய்வேலி நடராஜர் கோயில் வாசலில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, குறைகளை சொல்லி இங்கு வழிபடலாம். இதற்கான விண்ணப்ப மனுவை வைத்தபடி கோயிலை மூன்று முறை வலம் வந்த பின் ஆராய்ச்சி மணியை அடிக்க வேண்டும். பின் அருகிலுள்ள பெட்டியில் மனுவைச் சேர்க்க வேண்டும். மறுநாள் அதிகாலை பூஜையின் போது அர்ச்சகர் பக்தர்களின் மனுக்களை நடராஜர் முன்னிலையில் வாசிப்பார். விண்ணப்பித்த 41 நாட்களுக்குள் குறை தீரும் என்பது நம்பிக்கை.