நற்கதி பெற...
UPDATED : டிச 19, 2024 | ADDED : டிச 19, 2024
அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சிஉயநின் திருவடியே சேர்வான்- நயநின்றநன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்சொல்மாலை கற்றேன் தொழுது.திருமாலே... துன்பம் தரும் தீவினைகள் என் அருகிலேயே இருப்பதால் பயம் உண்டாகிறது. வாழ்வில் நற்கதி பெறுவதற்காக உன் திருவடியைச் சரணடைந்தேன். சொல், பொருள் நயம் மிக்க பாடல்களைப் பாடி இனி உன் திருவடியை வணங்குவேன். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரம் ஜபித்து வருவேன் என்கிறார் பொய்கையாழ்வார்.