கிரகதோஷம் தீர...
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
அஸ்வமேத யாகம் நடத்திய மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் கேட்பதற்காக வாமனராக எழுந்தருளினார் மகாவிஷ்ணு. காலால் அளந்தபடி மூன்று அடி நிலம் கேட்ட வாமனர், மகாபலியின் ஆணவத்தைப் போக்க உலகளந்தபெருமாளாக உருவெடுத்தார். வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை உணர்ந்த மகாபலி, அவரின் திருவடியில் சரணடைந்தான். அவனுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த வாமனர், சிரஞ்சீவியாக வாழும் பாக்கியம் அளித்தார். வேதாந்த தேசிகன் இயற்றிய தசாவதார ஸ்தோத்திரத்தில் குருவுக்குரிய அதிபதியாக வாமனர் இடம் பெற்றுள்ளார். இவரை தியானித்து, 'ஓம் ஸ்ரீவாமன மூர்த்தியே நமஹ' என 108 முறை ஜபித்தால் கிரகதோஷம் தீரும்.