உள்ளூர் செய்திகள்

மணிகர்ணிகா காட்

கபில முனிவரின் சாபத்தால் சகரன் என்பவரின் புத்திரர்கள் எரிந்து சாம்பலாயினர். இதனால் அவர்களின் ஆத்மா நற்கதி அடையவில்லை. அவர்களின் வம்சத்தில் பிறந்த பகீரதன் மிகவும் வருந்தினார். தம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக தீவிரமாக தவத்தில் ஈடுபட்டார். வானுலகத்தில் ஓடும் கங்கை நதியை பூமிக்கு வரவழைத்தார். இந்த புனித நீர் பட்டதால் சகரனின் புத்திரர்கள் பிதுர்லோகத்தை அடைந்தனர். கங்கை நதியில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அதில் மணிகர்ணிகா காட் என்னும் தீர்த்தக்கட்டத்தில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்வது நல்லது.