உள்ளூர் செய்திகள்

பார்த்தால் போதும்

கங்கைக்கரையில் உள்ள புனித தலங்களில் காசி, பிரயாகை, ஹரித்துவார் புனித நீராடலுக்கும், முன்னோர் வழிபாட்டுக்கும் உரியவை. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் பிரயாகையில் சங்கமிக்கின்றன. இதை 'திரிவேணிசங்கமம்', 'தீர்த்தராஜா' என்றும் அழைப்பர். முன்பு படைப்புக்கடவுளான பிரம்மா பல யாகங்களை இங்கு நடத்தியதால் இத்தலத்திற்கு 'பிரயாகை' எனப் பெயர் வந்தது. அதுவே தற்போது 'பிரயாக்ராஜ்' எனப்படுகிறது. கங்கையின் நிறம் வெண்மை. யமுனாவின் நிறம் கருமை. திரிவேணிசங்கமத்தில் இருநிறங்களும் சங்கமிப்பதைக் காணலாம். வேத காலத்தில் ஓடிய சரஸ்வதி நதி தற்போது உள்முகமாக ஓடுவதால் கண்ணுக்குத் தெரியாது. பவித்ரமான திரிவேணி சங்கமத்தை பார்த்தாலே பாவம் பறந்தோடும். ஜன.13, 2025 முதல் பிப். 26, 2025 வரை மகா கும்பமேளா என்னும் புனித நீராடல் இங்கு நடக்கிறது.