உள்ளூர் செய்திகள்

குறையொன்றுமில்லை

1671 ஆவணி தேய்பிறை துவிதியை திதியன்று வியாழக்கிழமை. அந்நாளைத் தன் பிருந்தாவன பிரவேசத்திற்குரிய (ஜீவ சமாதி) நாளாகத் தேர்ந்தெடுத்தார் மகான் ராகவேந்திரர். அன்று அதிகாலையில் மூலராமர் பூஜையை நடத்தினார்.“சத்தியம், தர்மம் இரண்டும் மகத்தான சக்தி அளிக்க வல்லவை. இவற்றின் வழியில் நடப்போருக்கு கடவுளின் அருள் கிடைக்கும்” என உபதேசம் செய்தார். கிழக்கு நோக்கி அமர்ந்து, “உங்களை விட்டு பிரியாமல் சமாதியில் தங்கியிருப்பேன். என்னை நாடி வருவோரின் குறைகளைத் தீர்த்து வழி காட்டுவேன்” எனச் சொல்லி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது 'குருவே சரணம்' என கோஷமிட்டு சமாதியை சாளக்கிராம கற்களால் பக்தர்கள் மூடினர். துங்கபத்திரை நதிக்கரையிலுள்ள இவரின் பிருந்தாவனம் 'மந்திராலயம்' எனப்படுகிறது. வியாழன் அன்று இவரை வழிபடுவோருக்கு குறை தீரும்.