உள்ளூர் செய்திகள்

ஜாதகம் இல்லையா...

திருமணப் பொருத்தம் பார்க்க ஜாதகம் இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் முன்னிலையில் பூ கட்டி பார்க்கலாம். தேர்வு செய்த பூ கிடைத்தால் தாராளமாக திருமணத்தை முடிவு செய்யலாம். தேனி மாவட்டம் தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் கதவையே அம்மனாக கருதுகின்றனர். உரிக்காத பழம், உடைக்காத தேங்காயை படைத்து வழிபட்டு பூவை கட்டி பார்க்கலாம். அம்மனின் அனுமதி கிடைத்தால் திருமணம் நடத்தலாம்.