உள்ளூர் செய்திகள்

வரம் தரும் பாடல்

எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் முக்கியமானது கந்தசஷ்டி விரதம். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த முருகப்பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார். இதை 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும். வசிஷ்ட முனிவரிடம் இருந்து இந்த விரதத்தை பற்றி அறிந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி, முனிவர்கள், தேவர்கள் என பலரும் பின்பற்றினர். 'செகமாயை உற்று' என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்த திருப்புகழை தினமும் படித்தால் குழந்தை வரம் கிடைக்கும். செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்ததிருமாது கெர்ப்ப ...... முடலுாறித்தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்திரமாய ளித்த ...... பொருளாகிமகவாவி னுச்சி விழியாந நத்தில்மலைநேர்பு யத்தி ...... லுறவாடிமடிமீத டுத்து விளையாடி நித்தமணிவாயின் முத்தி ...... தரவேணும்முகமாய மிட்ட குறமாதி னுக்குமுலைமேல ணைக்க ...... வருநீதாமுதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்மொழியேயு ரைத்த ...... குருநாதாதகையாதெ னக்கு னடிகாண வைத்ததனியேர கத்தின் ...... முருகோனேதருகாவி ரிக்கு வடபாரி சத்தில்சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.