உள்ளூர் செய்திகள்

புத்தி பலமாக...

முருகனின் பெருமைகளை விளக்கும் நுால் அருணகிரிநாதரின் திருப்புகழ். இதிலுள்ள பாடல்கள் 14,000. ஆனால் நமக்கு கிடைத்தவை 1307. அதில் 1088 வித ஓசைகள் உள்ளன. மந்திர நுாலான இதன் பெருமைகளை 16 பாடல்களில் பக்தர் ஒருவர் பாடியுள்ளார். திருப்புகழை பாடினால் புத்தி பலம் பெறும். தலை நிமிர்ந்து வாழலாம் என்கிறது ஒரு பாடல். திருப்புகழ் படிக்கும் அவர் சிந்தை வலுவாலேஒருத்தரை மதிப்பதிலை உன்தன் அருளாலேபொருப்பு உக மிகப்பொருது வென்று மயில் மீதேதரித்து ஒரு திருத்தணியில் நின்ற பெருமாளே.