உள்ளூர் செய்திகள்

சாயாபிஷேகம்

திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்தபின்பு ஜெயந்திநாதர் (முருகப்பெருமான்) பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கிறது. இதை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்கிறார்.