விசாகன் அருள் முக்கியம்
முருகனுக்குரிய பதினாறு நாமங்களில் ஒன்று விசாகன். இதற்கு பறவை மீது சஞ்சரிப்பவன் என பொருள். அதனால் தான் முருக அஷ்டோத்திரத்தில், 'ஓம் விசாகாய நமஹ' என அவரது நட்சத்திரம் குறித்த நாமாவளி இடம் பெற்றுள்ளது. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்ற பாடல் வரிகளுக்கு மூலம், முருகனிடம் இருந்து பெற்றது. ஏனென்றால் முதன் முதலில் உலகினை சுற்றி வந்தவர் முருகப்பெருமான். யாராக இருந்தாலும் தன் சொந்த நாட்டில் இருந்து வெளி நாட்டிற்கு செல்லவும், உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவும் முருகனுடைய அருள் இருந்தால் தான் அது நடக்கும். அது எப்படி...ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் செல்வதற்கும் அவர் அங்கிருந்து வெளியேறுவதற்கும் அனுமதிக்கும் ஆவணம் விசா. ஆக, விசா கிடைத்தால் தான் ஒருவர் எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியும். அதற்கு விசாகன் அருள் முக்கியம். அதனால் தான் சொந்த நாட்டில் இருந்து வெளிநாடு செல்பவருக்கு 'விசாகன்' பெயரிலே 'விசா' என்னும் ஆவணம் வழங்கப்படுகிறது போலும்.