உள்ளூர் செய்திகள்

தீபம் பார்த்தால் பாவம் போகும்

திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற கோயில்களில் திருக்கார்த்திகையன்று மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றுகிறார்கள். எதற்காகத் தெரியுமா... சின்ன அகலாக இருந்தால் அதன் பிரகாசம் கொஞ்ச துாரமும், சொக்கப்பனை என்றால் அதன் பிரகாசம் ரொம்ப துாரத்துக்குத் தெரியும். இதுவே அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றினால் பல ஊர்களுக்கு தெரியும். இதனால் அந்த எல்லைக்குள் இருக்கும் சகல உயிர்களுக்கும் இந்தப் பிரகாசம் பட்டு அதன் பாவங்கள் போகும். இப்படி சாதாரணமாக இரண்டு, நான்கு கால் உயிரினங்களின் பாவமும் போக வேண்டும் என்றே முன்னோர்கள் இதை ஏற்படுத்தியுள்ளனர். வேதத்தில் அடிக்கடி 'த்விபாத், சதுஷ்பாத்' என்று இருகால், நாற்கால் உயிரினங்களின் நலன்களை கோரும் பல மந்திரங்கள் உள்ளன.