உள்ளூர் செய்திகள்

திருமலையில் உள்ள வேங்கடவனே

கடியார் பொழிலணி வேங்கடவா! கரும்போரேறே!நீயுகக்கும்குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலேகடிய வெங்கானிடைக் கன்றின் பின்போன சிறுக்குட்டச் செங்கமல அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்மணம் வீசும் சோலைகளால் நிரம்பியுள்ள அழகான உயர்ந்த திருமலையில் உள்ள வேங்கடவனே. கறுத்த நிறமுடைய வலிமைமிக்க ரிஷபம் போன்றவனே. ஆநிரைகள் மேல் பிரியம் உடையவனே. குடை, பாதரட்சைகள், புல்லாங்குழல் இல்லாமல் பசுக்களை மேய்க்க கடும் வெப்பமுள்ள காட்டிற்கு சென்றுவிட்டாய். இதனால் உன் சிறிய அழகான தாமரை மலர்போன்ற பாதங்கள் கொதித்தது. இதனால் உன் கண்களும் வெப்பத்தால் சிவந்ததே என்கிறார் பெரியாழ்வார்.