விசேஷ கோயில்கள்
UPDATED : டிச 15, 2023 | ADDED : டிச 15, 2023
* கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது தில்லைகாளி கோயில். இங்கு பிரகாரத்தில் கடம்பவன தட்சிணமூர்த்தி ரூபிணி என்ற பெயரில் பெண்வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.* சென்னை மயிலை கோல விழியம்மனின் கண்கள் மனிதரின் கண்களை போலவே உயிரோட்டமாக இருக்கும். * செங்கல்பட்டு அருகே உள்ள பொன்பதர் கூடம் என்னும் தலத்தில் உற்ஸவரான ராமர்பிரான் 4 கரங்களுடன் காட்சி தருகிறார். * ஈரோடு மாவட்டம் காங்கேயம் முருகன் கோயிலில் ஆடு மாடுகள் (கால்நடைகள்)நோய் நொடியின்றி வாழ கதனை எனப்படும் வழிபாடு நடத்தப்படுகிறது. * ராகு கேது ஆசியை பெற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமியை வழிபட்டால் போதுமானது.