உள்ளூர் செய்திகள்

அவனருளை வேண்டுகிறேன்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,வெய்ய கதிரோன் விளக்காக - செய்யசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலைஇடர் ஆழி நீங்குகவே என்று பாடுகிறார் பொய்கையாழ்வார். இந்த உலகமே பெரிய அகலாகவும், அதிலுள்ள கடல்நீர் நெய்யாகவும் இருக்கிறது. கடலில் உதிக்கும் சூரியனையே நெருப்பாக நினைத்து விளக்கை ஏற்றி வைத்தேன். ஒளி மிக்க சக்கரத்தை ஏந்திய திருமாலின் திருவடியில் இந்தச் சொல் மாலையை (பாடல்களை) சூட்டி வணங்கினேன். துன்பம் தீர அவனருளை வேண்டுகிறேன் என்கிறார்.