பூவும் நீரும்
UPDATED : ஜன 12, 2024 | ADDED : ஜன 12, 2024
கடவுள் வழிபாட்டில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அவருக்கு சமர்ப்பிக்கப்படும் தீர்த்தமும், அவருக்கு அர்ச்சிக்கப்படும் புஷ்பமும். இதனைத்தான் நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் 'புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு நீருண்டு' என்றார். எட்டுவிதமான பூக்களை மூன்று காலங்களில் எப்போது வேண்டுமானாலும் வழிபடும் தெய்வத்திற்கு சாற்றலாம். அவையாவன* புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை. மேலும் ஒருவர் தெய்வத்திற்கு அன்பாலும் பக்தியாலும் சமர்ப்பிக்கப்படும் புஷ்பம் அவரது திருமேனியை அலங்கரிக்கும்.