அனைவரையும் வசப்படுத்தணுமா...
உலக உயிர்களுக்கெல்லாம் தாயாகிய அம்பிகையை 'அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறைகள் பேசும்' என போற்றுகிறார் தாயுமானவர். பாரத தேசத்தின் தென் திசையில் உள்ள குமரித்துறையில் கோயில் கொண்டு விளங்கும் அவளுக்கு பகவதி என்று பெயர். அவள் கன்னித்தெய்வமாக அருள் பாலிக்கும் தலம் என்பதால் அத்தலத்திற்கு கன்னியாகுமரி என பெயர் வந்தன. 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அது புனித தலமாக திகழ்கிறது என்பதை நாயன்மார்களின் ஒருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் 'கங்கை யாடிலென் காவிடி யாடிலென் கொங்கு தண்குமரித்துறை யாடிலென்' என்ற தேவார பாடல்கள் வழி உறுதி செய்கிறார். அங்கு பின்னாளில் சென்று பகவதியை தரிசித்த தேசியகவிஞரோ... பின்னோர் இரவினிலே - கரும் வெண்மை அழகொன்று வந்தது கண்முன்புகன்னி வடிவம் என்றே - களி கொண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா - இவள் ஆதிபராசக்தி தேவியடா - அவள் இன்னருள் வேண்டுமடா - பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா. என பாடுகிறார். அனைவரையும் வசப்படுத்த அவளருளை நாடுங்கள்.