உள்ளூர் செய்திகள்

உயர்ந்த செயல்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.என்கிறார் திருவள்ளுவர். இதில் 'தென் புலத்தார்' என்பது முன்னோரைக் குறிக்கும். பித்ருக்களுக்கு உரிய கடமைகளை அவசியம் செய்ய வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ;' என்கிறது தைத்திரீய உபநிடதம். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்கிறார் அவ்வையார். அதாவது பெற்றோருக்கு அவர்கள் வாழும் காலத்தில் சேவை செய்ய வேண்டும். ஏனெனில் அவர்களின் தியாகத்திற்கு அளவு கிடையாது. முன்னோர் வழிபாட்டை விடவும் உயர்ந்த செயல் சேவை செய்வதாகும்.