வாழ்நாள் முழுவதும்...
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
சிவபக்தனான ராவணன் சிவதரிசனம் பெறுவதற்காக தனது ஒன்பது தலைகளை வெட்டி அவருக்கு காணிக்கையாக்கினான். அப்படியும் தரிசனம் கிடைக்காமல் போகவே பத்தாவது தலையை வெட்ட முயன்றான். அப்போது காட்சியளித்த சிவனிடம், முப்பத்து முக்கோடி நாட்கள் வாழ வேண்டும் என வரம் கேட்டான். அவரும் சம்மதிக்க தன் வாழ்நாள் முழுவதும் தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை வழிபட்டான்.