இயற்கையே சிவன்
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் 'கடவுளுக்கு தொடர்புடைய ஐந்து' என்பது பொருள். இயற்கையே கடவுள் என்ற கோட்பாடின்படி தனித்தனியாக சிவலிங்கம் வடித்து பஞ்சபூத தலங்களை உருவாக்கினர். அவை காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (மண்), திருவானைக்காவல்( நீர்), திருவண்ணாமலை (அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம்(ஆகாயம்).