காசியில் சப்தரிஷிகள்
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
காசி என்றதும் நினைவுக்கு வருவது கங்கை நதியும், காசி விஸ்வநாதர் கோயிலும் தான். விஸ்வ நாதருக்கு தினமும் இரவு 7:45 -- 8:30 மணி வரை சப்தரிஷி பூஜை நடக்கும். அத்ரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகளாவர். வான மண்டலத்தின் பால்வெளிக்கு வடக்கு திசையில் சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து தினமும் வரும் இவர்கள், காசி விஸ்வநாதரை நேரில் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதமாக ஏழு அந்தணர்கள் (7பண்டாக்கள்) விஸ்வநாதரைச் சுற்றி பூஜை செய்வர்.