உள்ளூர் செய்திகள்

கங்கையா... காவிரியா...

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய கோயில்களை 'பாடல் பெற்ற தலங்கள்' என்பர். இவை மொத்தம் 274. இவற்றில் பெரும்பாலும் சோழ நாட்டின் காவிரிக் கரையோரத்தில் உள்ளன. பெருமாளின் மீது ஆழ்வார்கள் திவ்யப் பரபந்தம் பாடிய கோயில்களை 'திவ்ய தேசம்' என்பர். அவை 108. இவையும் காவிரிக்கரையோரத்தில் அதிகம் உள்ளன. எனவே கங்கையினும் மேலானது காவிரி தீர்த்தம் என போற்றப்படுகிறது.