மரத்தின் மனசு
UPDATED : மே 03, 2024 | ADDED : மே 03, 2024
* ஓரறிவு உயிர் உள்ள மரங்கள் நாங்கள். எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். * வெயிலின் தாக்கத்தால் நாங்கள் படும் வேதனையை சொல்லி மாளாது. * ஆழமாக வேர் விடும் முன்பே நிழல் தரும் எங்கள் கிளைகளை வெட்டாதீர்கள். * அறிவிப்பு பலகை என்ற பெயரில் ஆணியால் அடித்தும், கம்பியால் கட்டியும் காயப்படுத்தாதீர்கள். * எங்களின் கிளைகளை நெருக்கி பந்தல், நிழல்குடை அமைத்து எங்களின் வளர்ச்சியைத் தடுக்காதீர்கள். * தார், கான்கிரீட் சாலைகளால் தண்ணீர் கிடைப்பது இல்லை. மழையால் மட்டும் மகிழ்ச்சி அடைகிறோம். * எல்லா உயிர்களையும் நேசிப்பவருக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.