மன்னிக்க மாட்டாயா?
UPDATED : ஜூன் 21, 2024 | ADDED : ஜூன் 21, 2024
சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் நடத்திய போது அதில் பங்கேற்ற அக்னி, அசுரர்களுக்கு அவிர்பாகத்தை ஏந்திக் கொடுத்தான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் அவனை அழிக்க முயன்றார். அவன் கிளியாக மாறி, தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பூலோகத்தில் சிவனை வழிபட்டான். அவனை மன்னித்த சிவன், மீண்டும் பழைய உருவத்தை வழங்கினார். இத்தலமே திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள கீரனுார் சிவலோகநாதர் கோயிலாகும். அறியாமல் செய்த தவறுக்கு, மன்னிப்பு வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்தால் பாவ விமோசனம் கிடைக்கும்.