ஆடுகின்றாரடி அம்பலத்திலே!
UPDATED : ஜூலை 17, 2021 | ADDED : ஜூலை 17, 2021
அம்பலம் என்பதற்கு திறந்தவெளி என பொருள். சிவபெருமான் அம்பலத்தில் ஆடுவதால் அம்பலத்தான் எனப்பட்டார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப் படுகிறார். அம்பலத்தாடு பவன், அம்பலத்தரசன் என்றும் அழைக்கப்படுகிறார்.