மங்களம் தரும் செவ்வாய்
UPDATED : மார் 27, 2021 | ADDED : மார் 27, 2021
'சிவம்' என்பதற்கு 'மங்களம்' என்பது பொருள். பார்வதிக்கு 'மங்களாம்பிகை' எனப் பெயருண்டு. இவர்களின் பிள்ளையான முருகப்பெருமானும் மங்களத்தன்மை மிக்கவர் என்பதால் மங்களவாரமான செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது சிறப்பு. நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு 'மங்களன்' என்றும் பெயருண்டு. செவ்வாயன்று சிவன், பார்வதி, முருப்பெருமானை வழிபட்டால் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். செவ்வாய்க்கிழமையில் வரும் தேய்பிறை சதுர்த்தியை 'அங்காரக சதுர்த்தி' என்பர். இந்நாளில் விநாயகருக்கு விளக்கேற்ற கடன் பிரச்னை தீரும்.