வரம் தருவாள் பராசக்தி!
UPDATED : ஜூலை 22, 2014 | ADDED : ஜூலை 22, 2014
ஆடி கடைசி செவ்வாயன்று மேற்கொள்வது பராசக்தி விரதம். பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தால், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். இந்த விரதத்தை காலை ஐந்து மணிக்கே தொடங்க வேண்டும். அம்மன் படங்களை செந்நிற மலர்களால் அலங்கரித்து விளக்கேற்ற வேண்டும். பால், பழம், இனிப்பு படைக்க வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், மதியம் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது அவசியம். இரவில் கோயிலுக்குச் சென்று அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபட வேண்டும்.