உள்ளூர் செய்திகள்

விழா காலத்தில் மூலவரை தரிசிக்கலாமா?

கருவறையில் காட்சி தருபவர் மூலவர். விழா காலத்தில் ஊரெங்கும் சுற்றி வருபவர் உற்சவர். இருவருக்கும் கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம், பூஜைகள் நடக்கும்.உற்சவர் வீதியில் சுற்றும் போது, மூலவரின் சக்தி அனைத்தும் தன்னுடன் கொண்டு செல்வதால், கருவறையில் மூலவரை தரிசிக்க கூடாது. மூலவர் சிற்பமாக செய்யப்படாமல், சுயம்பு மூர்த்தியாக (தானாகத் தோன்றியவர்) இருந்தால் தரிசனம் செய்யலாம். ஆனால் அர்ச்சனை செய்யக்கூடாது.