உள்ளூர் செய்திகள்

முக்தி தரும் நகரம்

கம்சனின் மாமனார் ஜராசந்தன். இவர் தன் மருமகனைக் கொன்ற கிருஷ்ணரை பழிவாங்க எண்ணினார். எனவே, மதுராபுரி மீது படையெடுத்தார். ஆனால் கிருஷ்ணரைப் பிடிக்க முடியவில்லை. எனினும் மனம் தளராது பல முறை படையெடுத்தார். இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே கடலில் இருந்த ஒரு தீவில் அழகிய நகரை நிர்மாணித்து, மக்களை அங்கே குடியமர்த்தினார் கிருஷ்ணர். இந்த நகரே 'துவாரகை' எனப்பெயர் பெற்றது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.