வந்தாச்சு மகாளயபட்சம்
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
செப்டம்பர் 11 - மகாளயபட்சம் ஆரம்பம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளயபட்சம். 'மகாளயம்' என்றால் 'பெரிய கூட்டம்' என்று பொருள். பட்சம் என்றால் பதினைந்து நாட்களை குறிக்கும். அதாவது மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று, முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதி தருகிறார் எமதர்மராஜர். அவர்களுக்கு விருப்பமான இடம் பூலோகத்தில் எதுவாக இருக்கும்? நமது வீடுதானே... எனவே இந்நாட்களில் அவர்களை மானசீகமாக வணங்குங்கள். 2022 செப்.11 மகாளயபட்சம் ஆரம்பமாகிறது.