மாரியம்மனின் மகள்
UPDATED : அக் 15, 2012 | ADDED : அக் 15, 2012
கன்னி தெய்வமான மாரியம்மனுக்கு மகளா என்று ஆச்சரியப்படலாம். ஆம்..திருச்சி சமயபுரம் கண்ணனூரில் முதலில் கட்டப்பட்டது ஆதிமாரியம்மன் கோயில். இதன்பிறகே, சமயபுரத்தில் தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டு பிரபலமாகி விட்டது. முன்னவளை தாயாகவும், பின்னவளை மகளாகவும் இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். ஆடிப்பெருக்கு சமயத்தில் மகள் மாரியம்மனுக்கு, தாய் மாரியம்மன் சீதனம் அளிக்கும் சடங்கு நடக்கிறது.