கல்யாண பத்திரிகைகளில் என் பெயரை போடாதீர்கள் - குமுறுகிறார் பெரியவர்
வரதட்சணை வாங்கி திருமணம் நடத்துகிறீர்களா? காஞ்சி மகாபெரியவர் குமுறுவதைக் கேளுங்க!''திருமணங்களில் வரதட்சணைப் பழக்கமும், டாம்பீகமாக நடத்துகிற பழக்கமும் தொலைய வேண்டும். ஏழை உறவினர் குடும்ப திருமணங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யவேண்டும். பெண்கள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடம் தரக்கூடாது. ''குலப்பெண்களின் சித்தம் கெட்டுவிட்டால், தர்மம் போய்விடும். தர்மம் அழிந்தால் தேசமே போய்விடும்,'' என்று அர்ஜுனன் பகவானிடம் அழுதான். உரியகாலத்தில் பெண்குழந்தைகளுக்கு கல்யாணம் செய்துவைத்து ஸ்திரீ தர்மமும், சமூகதர்மமும் கெடாமல் இருக்க உதவ வேண்டும். இதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிற வரதட்சணை வழக்கத்தை நாம் கைவிட்டே ஆக வேண்டும். இப்போது, ஏராளமானோர் கல்யாண பத்திரிக்கைகளில் 'ஆசார்ய சுவாமிகள் அனுகிரஹத்தோடு நிச்சயப்பட்டிருப்பதாக' போடுகிறீர்கள். இனிமேல், வரதட்சணை வாங்குகிறவர்களும், கொடுக்கிறவர்களும் அப்படிப்பட்ட கல்யாணப் பத்திரிகைகளில் என் அனுகிரஹத்தோடு நிச்சயித்ததாகப் போடவேண்டாம். பெரியவரின் விருப்பத்தில் எதை நிறைவேற்றப் போகிறீர்கள்?