குலதெய்வம் தெரியாதவர்களுக்கு...
குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே பணிகளைத் தொடங்க வேண்டும். குலதெய்வம் என்பது பெற்றோரைப் போல நம்முடன் இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகும். பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் போது சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவர். சிலருக்கு குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் சோதனைகள் ஏற்படும் போது தெய்வ குற்றமாக இருக்குமோ என வருத்தம் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் வழிபட அகத்தியர் பூஜித்த வனதுர்கை கோயில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3கி.மீ., துராத்தில் உள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. இக்கோயிலை கதிர் வேய்ந்த மங்கலம் என 'கவிச்சக்கரவர்த்தி' கம்பர் குறிப்பிடுகிறார். பெயருக்கேற்ப கதிரவனின்(சூரியன்) கதிர்கள் அம்பிகை மீது படுவதால் 'ஆகாச துர்கை' என பெயருண்டு. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகுகாலங்களில் வழிபடுங்கள்.