எல்லாம் அவன் செயல்
UPDATED : ஜன 22, 2021 | ADDED : ஜன 22, 2021
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்று இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த துறவியான தாயுமானவர், 'ஆட்டுவிப்பவன் இல்லாமல் பம்பரம் தானாக ஆடுமா? ஆடாது. அதுபோல, அண்டம் அனைத்தையும் ஆட்டுவிப்பவன் ஒருவன் இருக்கிறான். ஒரு மனிதன் இல்லறத்தில் ஈடுபட்டாலும், துறவறத்தில் ஈடுபட்டாலும் 'நான்' என்ற ஆணவம் கொள்வது கூடாது. 'எல்லாம் அவன் செயல்' என்ற எண்ணமுடன் அடங்கி வாழ்ந்தால் இல்லறமும் சிறந்தது. துறவறமும் சிறந்தது. இல்லாவிட்டால் இரண்டுமே தாழ்ந்தது” என்று தீர்ப்பளித்தார். இதைக் கேட்ட இருவரும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.