உருவமற்ற கோயில் கட்டியவர்
UPDATED : டிச 17, 2012 | ADDED : டிச 17, 2012
ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ளது. இவ்வூரை 'திருப்பெருந்துறை' என்று அக்காலத்தில் அழைத்தனர். இங்குள்ள வெயில்காத்த விநாயகர் மாணிக்கவாசகரின் கனவில் வந்தார். 'தானே பரம்பொருள்' என்பதை அவருக்கு உணர்த்த, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மும்மூர்த்தி வடிவில் காட்சியளித்தார். ''கடவுளுக்கு உருவம் இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தும் விதத்தில், ''இங்குள்ள குருந்த மரத்தடியில் என் தந்தை உனக்கு குருவாக வந்து உபதேசம் அளிப்பார். அதன்பின் கோயில் திருப்பணியைத் தொடங்கு. அதில் உருவமில்லாமல் கோயில் கட்டு,'' என்று கட்டளையிட்டார். அதன்படி, மாணிக்கவாசகர் ஆத்மநாதர், யோகாம்பிகை என்று பெயரிட்ட சந்நிதிகளை அருவ வடிவில் கட்டினார். மும்மூர்த்தியாகத் தோன்றிய விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் மூன்று விநாயகர்களையும் நிர்மாணித்தார்.