தேன் கிண்ணம்
UPDATED : நவ 29, 2021 | ADDED : நவ 29, 2021
மகாவிஷ்ணுவின் பெருமை, அவரது எட்டெழுத்தை மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதன் சிறப்பை சாம வேதம் விவரிக்கிறது. இந்த மந்திரத்தை ஜபிப்பவன் உடல்நலம், மனநலம், நல்லபுத்தி, நீண்ட ஆயுள் பெற்று வாழ்வான். 'தேனால் நிரப்பப்பட்ட பாத்திரங்கள் போல இருக்கும் வேதங்களைப் பாடி மகிழுங்கள்' என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கில் இசை நயம் மிக்க சாமவேதத்தை 'தேன் கிண்ணம்' என்றே சொல்லலாம்.