விரதம் இருப்பது எப்படி?
* கந்தசஷ்டி விரத துவக்கநாளான அக்.20 - அக் 25 வரை அதிகாலை 4:30-6:00 மணிக்குள் நீராடவேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிடலாம். உடல்நிலை காரணமாக, உணவை தவிர்க்க முடியாதவர்கள் எளிய உணவு உண்ணலாம்.* முருகனுக்குரிய மந்திரங்களான 'ஓம் சரவணபவ' 'ஓம் சரவணபவாயநம' 'ஓம் முருகா' ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து வர வேண்டும்.* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் 'அரோகரா' கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.* திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.* மலைக்கோயில்களில் மலையை வலம் வருவது புண்ணியம்.கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.* பணிக்குச் செல்பவர்கள் பணி நேரத்துக்கேற்ப மந்திரம் சொல்லலாம்.* விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் விலகி, குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.