உள்ளூர் செய்திகள்

இருமனம் இணைந்தது எப்படி

திருமணச் சடங்கில் மணமகளின் காலை மணமகன் பற்றிக் கொள்ள அவள் காலால் ஏழு அடிகளை எடுத்து வைப்பாள். அப்போது 'சப்தபதி' என்னும் மந்திரம் சொல்லப்படும். 'சப்தம்' என்றால் ஏழு. அந்த மந்திரத்தின் இறுதியில் 'ஏழு அடிகளைக் கடந்த நீ என்றும் என் தோழியாக இருக்க வேண்டும். நாம் என்றென்றும் இனிய நண்பர்களாக வாழ்வோம். நல்ல மழலைச் செல்வமும் செல்வ வளமும் பெறுவதற்காக நீ என்னோடு வருவாயாக' என்னும் பொருளில் மந்திரம் இடம்பெறும். இதற்கு 'சகா மந்திரம்' என்றும் பெயருண்டு. 'சகா' என்றால் உறவு அல்லது நட்பு. இல்லற வாழ்வில் ஈடுபடும் இரு மனங்களை இணைத்திடும் மந்திரம் இது.