உள்ளூர் செய்திகள்

கண்ணா! உனைத்தேடுகிறேன்

கடவுளை ஒளிவடிவில் வழிபடுவது ஞானிகளின் நிலை. ஆனால் நம்மை போன்ற எளிய மனிதர்களால் அப்படி வழிபட முடியாது என்பதால் தான் பாலகிருஷ்ணராக அவதரித்தார் மகாவிஷ்ணு. மதுசூதன சரஸ்வதி என்னும் அருளாளர் கிருஷ்ணர் மீது ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம் பாடினார் இதில், ''ஞானிகள் மனதை அடக்கி தங்களுக்குள் ஜோதி வடிவில் கடவுளை தரிசிப்பர். அதற்காக மற்றவர்கள் தவம் செய்ய முடிய வில்லையே என வருந்த வேண்டாம். அந்த ஜோதியே நீலமேனியுடன் கார்மேக வண்ணனாக, கண்ணனாக யமுனா நதிக்கரையில் ஓடி விளையாடியது. அவரை தரிசித்தால் மனம் பரவசப்படும். வளமான வாழ்வும், மோட்சமும் கிடைக்கும்'' என்கிறார்.