உள்ளூர் செய்திகள்

வாழ்க்கைக்கு வந்தால் வாழ்க்கை இனிக்கும்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் என்ன தெரியுமா? 'வாழ்க்கை'... இந்த ஊராட்சி பகுதியில் புத்தகளூர் என்ற குக்கிராமம் உ<ள்ளது. இங்குள்ள பரமசுந்தரர் கோயில் நாகதோஷம் போக்கும் தலமாக விளங்குகிறது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் சிதிலமடைந்து விட்டது. புத்தகை என்னும் முனிவர், இவ்வூரில் பல காலம் சிவனை நினைத்து தவமிருந்ததார். அவரைச் சுற்றி பெரிய புற்று வளர்ந்தது. புற்றுக்கு மேலே கைகள் மட்டும் வணங்கிய கோலத்தில் மேலே நீட்டியபடி இருந்தது. அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவன் காட்சியளித்து அருள்புரிந்தார். முனிவரின் பெயரால் 'புத்தகை' எனப்பட்ட இவ்வூர், தற்போது புத்தகளூராக மாறியது. விட்டது. சுவாமி பரமசுந்தரராகவும், அம்பிகை பரமேஸ்வரியாகவும் வீற்றிருக்கின்றனர். தட்சிணாமூர்த்தி ஞானகுருவாக விளங்குகிறார். வியாழனன்று இவரை வழிபட்டால் கல்வியும் ஞானமும் கைகூடும். தட்சிணாமூர்த்தி சிலையின் பின்புறம் கல்வெட்டு இருப்பது வித்தியாசமானது. கோயிலின் பின்புறம் பாம்பு புற்றுகள் உள்ளன. செவ்வாய், வெள்ளியில் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். வாழ்க்கை கோயில் திருப்பணி நடக்கிறது. இதில் பங்கேற்றால் பக்தர்களின் வாழ்க்கை இனிக்கும் போன்: 98400 53289.- மகாலட்சுமி சுப்பிரமணியன்